ஹோலிகா தகனம்: மார்ச் 17-ல் நாடாளுமன்ற கூட்டங்கள் ரத்து

ஹோலிகா தகனம் நிகழ்வை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மார்ச் 17ஆம் தேதி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஹோலிகா தகனம் நிகழ்வை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மார்ச் 17ஆம் தேதி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்தது.

தொடர்ந்து, இரண்டாவது பகுதி கூட்டத்தொடா் இன்று காலை இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஹோலி பண்டிகையின் ஒரு நிகழ்வான ஹோலிகா தகனம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அன்று கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com