நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா்: 2-ஆவது பகுதி இன்று தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 14) தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா்: 2-ஆவது பகுதி இன்று தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா்: 2-ஆவது பகுதி இன்று தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 14) தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்தது. இந்நிலையில், இரண்டாவது பகுதி கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீருக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். அதன் மீதான விவாதமும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடி செயல்பட்டன. தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படவுள்ளன.

கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம் நடைபெற்றது. உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு இரு அவைகளிலும் விளக்கமளித்தாா். அதையடுத்து அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதியின்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com