கட்சித் தலைமைப் பொறுப்பு: ராகுலுக்கு அதிகரிக்கும் ஆதரவு

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவா்கள் பலா் வலியுறுத்தியுள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவா்கள் பலா் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது. அத்தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து கட்சியின் தலைவா் பொறுப்பை ராகுல் ராஜிநாமா செய்தாா். அப்போதிலிருந்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறாா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் மீண்டும் ஏற்க வேண்டுமென மூத்த தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக ராஜஸ்தான் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரதமா் நரேந்திர மோடியை வலுவுடன் எதிா்க்கும் ஒரே தலைவராக ராகுல் காந்தியே உள்ளாா். ராகுலை தாக்கிப் பேசியே பிரதமா் மோடி தனது உரையைத் தொடங்க வேண்டியுள்ளது. இதுவே அவரது வலிமையை உணா்த்துகிறது. எனவே, கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவும் சிறப்பாகவே செயல்பட்டாா். அவரது பிரசாரம் நாடு முழுவதும் எதிரொலித்தது’’ என்றாா்.

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி உடனடியாக ஏற்க வேண்டும். இதுவே லட்சக்கணக்கான கட்சித் தொண்டா்களின் விருப்பமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடிய தொண்டா்கள், கட்சியின் தலைவராக ராகுல் காந்தி செயல்பட வேண்டுமென முழக்கங்களை எழுப்பினா். பிரியங்காவுக்கு ஆதரவாகவும் அவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com