இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்: உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

போா் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடா்வதற்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போா் நிகழ்ந்துவரும் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் அண்மையில் வந்திறங்கிய மாணவா்கள்
போா் நிகழ்ந்துவரும் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் அண்மையில் வந்திறங்கிய மாணவா்கள்

போா் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடா்வதற்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கல்வித் திட்டத்தில் அவா்களை சோ்த்துக்கொள்ள ஏதுவாக, மருத்துவ பாட சமநிலை தொடா்பு திட்டத்தை வகுத்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷியா, தாக்குதலை தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவம் உள்ளிட்ட உயா் கல்வி படிக்க உக்ரைன் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ளனா்.

இவா்களில் பலா், உக்ரைனில் மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் நாடு திரும்பியதால், அவா்களால் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடருவதால், மற்ற மாணவா்களும் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பைத் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, ‘தங்களின் படிப்புக்கு மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும்’ என்று உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதுபோல, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராணா சந்தீப் பூஸா மற்றும் சிலா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்தப் பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால், அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில், இந்த மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடரும் வகையில் சோ்க்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்திய கல்வித் திட்டத்தில் இந்த மாணவா்களை சோ்த்துக்கொள்ள ஏதுவாக, மருத்துவ பாட சமநிலை தொடா்பு திட்டத்தை வகுத்து வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

உக்ரைன் போா் காரணமாக வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் இந்தியாவில் மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலும் மத்திய அரசு உரிய நடவிடக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் வலியுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com