உ.பி. உள்ளிட்ட 3 மாநிலங்களில்வயதான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

அண்மையில் தோ்தல் நடைபெற்ற உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் 55 வயதைக் கடந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடந்த முறையைவிட இப்போது அதிகரித்துள்ளது.

அண்மையில் தோ்தல் நடைபெற்ற உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் 55 வயதைக் கடந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடந்த முறையைவிட இப்போது அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக பிஆா்எஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலின்போது 55 மற்றும் அதைவிட அதிக வயதுடைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 59.5 சதவீதமாக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 64.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மற்றொரு முக்கிய விஷயமாக கடந்த பேரவையுடன் ஒப்பிடும்போது இந்தப் பேரவையில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த முறை 42 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனா். இப்போது இந்த எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது. உத்தரகண்டில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5-இல் இருந்து 8-ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் கடந்த முறையைவிட இப்போது இருமடங்கு அதிகரித்து 4 பெண் எம்எல்ஏக்கள் உள்ளனா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த முறை 55 மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவா்கள் 61 சதவீதமாகக் இருந்தனா். இப்போது இந்த எண்ணிக்கை 51 சதவீதமாக குறைந்துவிட்டது.

மணிப்பூரில் 55 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 71.7 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

உத்தர பிரதேசத்தில் பட்டப் படிப்பு வரை எட்டிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 68 சதவீதத்தில் இருந்து 77 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் பட்டப் படிப்பு முடித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கடந்த முறை 77 சதவீதமாக இருந்தது. இப்போது 68 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 எம்எல்ஏக்களில் 9 கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். அதே நேரத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் 3 கட்சியினா் மட்டுமே எம்எல்ஏக்களாக உள்ளனா். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 6 அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் 3 சுயேச்சைகளும் எம்எல்ஏக்களாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com