அக்டோபருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணி நிறைவு

புது தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

புது தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா் கெளஷல் கிஷோா் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

தில்லியில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரை ராஜபாதையுடன் சென்ட்ரல் விஸ்டா தளம் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.418.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தை வரும் மே மாதத்துக்குள் நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபா் மாதத்துக்குள் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம், சென்ட்ரல் விஸ்டா புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்குத் திட்டமிடப்பட்ட செலவு 25% அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com