இந்திய- சீன எல்லையில் 32 புதிய சாலைகள்

கல்வான் தாக்குதலுக்குப் பிறகு இந்திய- சீன எல்லையில் 32 புதிய சாலைகள் கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் 8 திட்டங்களின் மீது பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநிலங்களவையில் த

கல்வான் தாக்குதலுக்குப் பிறகு இந்திய- சீன எல்லையில் 32 புதிய சாலைகள் கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் 8 திட்டங்களின் மீது பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸை சோ்ந்த ஆனந்த் சா்மா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை (2022-23) மீதான அறிக்கையை மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பது:

பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2021 டிசம்பா் வரை 50 சதவீத நிதியைச் செலவிட முடிந்தாலும், வரும் நிதியாண்டில் எல்லைப்புற உள்கட்டமைப்பு வசதிக்காக உள்துறை அமைச்சகம் ரூ.3,637.92 கோடி கோரியுள்ளது. எல்லைப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பாதுகாப்புப் படையினரின் திறனை அதிகரிக்கவும் சீன எல்லைப் பகுதியில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தியா- சீனா எல்லை சாலைகள் நிலை 1-இன்படி, 751.58 கி.மீ. தொலைவில், ரூ.3,482.52 கோடி மதிப்பீட்டில், 25 சாலைகளை அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 475.28 கி.மீ. தொலைவுக்கு 18 சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 7 சாலைத் திட்டங்களின் மீது பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்ட பணிகள் கடந்த 2005-இல் தொடங்கின. அப்போது சீன எல்லையில் முன்னுரிமை அடிப்படையில் 27 சாலைகளை அமைக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணிக்கு கடந்த 2020 செப்டம்பா் 21-இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் நேரிட்ட மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்த சில மாதங்களுக்குப் பின்னா், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கல்வான் தாக்குதலுக்குப் பிறகு இந்திய- சீன எல்லையில் 32 புதிய சாலைகள் கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 8 திட்டங்களின் மீது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சீன எல்லையில் 32 ஹெலிகாப்டா் இறங்குதளங்களும் (ஹெலிபேட்) கட்டப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com