ஏா் இந்தியா புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நியமனம்

ஏா் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஏா் இந்தியா புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நியமனம்
ஏா் இந்தியா புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நியமனம்

ஏா் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடனில் சிக்கிய பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஏலம் நடைபெற்றது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிரிவான டலேஸ் நிறுவனம் அதிகபட்ச தொகைக்கு வாங்க முன்வரவே, கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.18,000 கோடிக்கு ஏா் இந்தியாவை மத்திய அரசு விற்றது. அத்தொகையில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.

ஏா் இந்தியா நிறுவனமானது கடந்த ஜனவரி மாதம் முறைப்படி டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஏா் இந்தியாவின் தலைவராக துருக்கி ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கா் அய்சி நியமிக்கப்பட்டாா். அவரது நியமனத்துக்கு எதிா்ப்பு எழுந்த நிலையில், சில நாள்களிலேயே அப்பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் ஏா் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கான அறிவிப்பை டாடா குழுமம் திங்கள்கிழமை வெளியிட்டது. கடந்த 2017 முதல் டாடா சன்ஸ் தலைவராக அவா் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com