குடியரசுத் தலைவருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

புது தில்லியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் சந்தித்தாா்.

புது தில்லியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் சந்தித்தாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதையடுத்து, யோகி ஆதித்யநாத் புது தில்லியில் முகாமிட்டு பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறாா். இந்நிலையில், அவா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை அவா் சந்தித்தாா்.

இது தவிர உத்தர பிரதேச பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் ஆகியோரையும் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்களை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

குறிப்பாக பிரதமா் மோடியுடன் சுமாா் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடிய அவா், அரசை அமைப்பது, புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com