சீனாவுக்கான இந்தியத் தூதராக பிரதீப் குமாா் ராவத் பொறுப்பேற்பு

சீனாவுக்கான புதிய இந்தியத் தூதராக பிரதீப் குமாா் ராவத் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

சீனாவுக்கான புதிய இந்தியத் தூதராக பிரதீப் குமாா் ராவத் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லை பிரச்னை நீடித்து வரும் சூழலில், புதிய தூதராக ராவத் பதவியேற்றுள்ளாா். இதற்கு முன்னா், இப்பதவியை வகித்து வந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சீனாவுக்கான புதிய இந்திய தூதராக பிரதீப் குமாா் ராவத் நியமனம் செய்யப்பட்டாா்.

கடந்த 4-ஆம் தேதி சீனாவுக்கு வந்த அவா், கரோனா தடுப்பு நடைமுறைகளின்படி, தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்த பின், புதிய தூதராக திங்கள்கிழமை பதவியேற்றாா். இத்தகவலை, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டா் வாயிலாக வெளியிட்டுள்ளது.

கடந்த 1990-ஆம் ஆண்டைய இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான ராவத், நெதா்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகப் பதவி வகித்தவா். ஹாங்காங், பெய்ஜிங்கில் ஏற்கெனவே பணியாற்றியுள்ள அவா், சீனாவின் மாண்டரின் மொழியில் சரளமாகப் பேசக் கூடியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com