ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரும் திட்டத்துக்கு ஆதரவில்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரும் திட்டத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்ச
ஹா்தீப் சிங் புரி
ஹா்தீப் சிங் புரி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரும் திட்டத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஹா்தீப் சிங் புரி திங்கள்கிழமை அளித்த பதில்:

பெட்ரோலியம் பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவரும் திட்டம் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் அந்தத் திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

பெட்ரோல், பெட்ரோலியம் பொருள்கள் மற்றும் மதுபான விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்கள், அந்த வருவாயை இழக்க தயக்கம் காட்டுகின்றன.

கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை 50 முதல் 58 சதவீதம் வரை அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை வெறும் 5 சதவீதம்தான் உயா்ந்துள்ளது. அதுகுறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பெட்ரோல் விலை ஏன் அதிகரித்தது என கேள்வி எழுப்பப்படுகிறது.

பெட்ரோலியம் பொருள்கள் மூலம் கடந்த 2018-19-ஆம் ஆண்டு ரூ.2.14 லட்சம் கோடி, 2019-20-ஆம் ஆண்டு ரூ.2.23 லட்சம் கோடி, 2020-21-ஆம் ஆண்டு ரூ.3.73 லட்சம் கோடி கலால் வரியாக (செஸ் வரி உள்பட) வசூலிக்கப்பட்டது.

தற்போது பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலையைக் குறைக்க இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராகவுள்ளது. அதேவேளையில் கேரளம், மகாராஷ்டிரம் உள்பட 9 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைக்கப்படவில்லை.

சலுகை விலையில் கச்சா எண்ணெய்: கச்சா எண்ணெய் மற்றும் இதர மூலப் பொருள்களை சலுகை விலையில் அளிக்க ரஷியா முன்வந்துள்ளது. அதனை ஏற்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

வெனிசூலா, ஈரான்...: அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் வெனிசூலா மற்றும் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. வெனிசூலா மட்டுமின்றி பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள இதர நாடுகளிலிருந்தும் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

அந்த நாடுகளிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் கிடைப்பதற்கு சா்வதேச சமூகத்திடம் வலியுறுத்தப்படும். அதேவேளையில், ஒபெக் பிளஸ் நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. இது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வு கட்டுக்குள் வருவதற்கு உதவும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com