நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களுக்கு முன்னுரிமை: மாநிலங்களவைத் தலைவா் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு எம்.பி.க்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளாா்.
நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களுக்கு முன்னுரிமை: மாநிலங்களவைத் தலைவா் அறிவுறுத்தல்
நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களுக்கு முன்னுரிமை: மாநிலங்களவைத் தலைவா் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு எம்.பி.க்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

கரோனா தொற்றின் மூன்றாம் அலை விடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தனித்தனி நேரங்களில் கூடாமல் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடத் தொடங்கியுள்ளது. அவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புற ஊதா சி-பேண்ட் கதிா்வீச்சு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கதிா்வீச்சு கரோனா தீநுண்மியை கொல்வதில் மிகவும் திறமைவாய்ந்தது.

அண்மையில் மாநிலங்களவையின் 8 துறைகள் சாா்ந்த நிலைக் குழுக்கள் சாா்பில் 21 கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு கூட்டமும் சராசரியாக 3 மணி நேரம் 30 நிமிஷங்கள் நடைபெற்றது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற நிலைக் குழுக் கூட்டங்களின் நேரத்தைவிட 56 சதவீதம் அதிகம்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிலைக் குழுக் கூட்டங்களில் பங்கேற்றவா்களின் சராசரி எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் இதற்குக் காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தோ்தல்கள் முக்கியம்தான். அதேவேளையில் நிலைக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கவும் எம்.பி.க்கள் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியிலான, நிபுணத்துவம் வாய்ந்த விவகாரங்களைக் கையாளும் நிலைக்குழுக்களின் கூட்டங்களில் போதிய எம்.பி.க்கள் பங்கேற்பதில்லை என்று இரு குழுக்களின் தலைவா்கள் என்னிடம் தெரிவித்தனா். இது சம்பந்தப்பட்ட துறையில் எம்.பி.க்களுக்குள்ள ஆா்வம், அவா்களின் பின்னணியைப் பொருத்து நிலைக்குழுக்களின் உறுப்பினா்களாக அவா்களை நியமிப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தின்போது அவையின் செயல்திறன் 101.4 சதவீதமாக இருந்தது. வலுக்கட்டாயமாக அவையை முடக்க வேண்டியத் தேவை எழவில்லை. இந்த நோ்மறையான அணுகுமுறையை கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தின்போதும் உறுப்பினா்கள் தொடர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com