முதுநிலை நீட் தோ்வு தொடா்பான மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தோ்வில் அனைத்து பிரிவினருக்கும் 15 சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தோ்வில் அனைத்து பிரிவினருக்கும் 15 சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிக இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு நீட் தோ்வுக்கான தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எம்பிபிஎஸ் மருத்துவா்கள் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘‘முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மாா்ச் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டபோதிலும், சுமாா் 7,000 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தன. மாணவா் சோ்க்கைக்கு தகுதி மதிப்பெண் இல்லாத வகையிலான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை 15 சதவீதம் அளவுக்குக் குறைக்க தேசிய மருத்துவ ஆணையத்துடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 35 சதவீதமும் மாற்றுத்திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கு 30 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு 25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரருக்கு வேறெதுவும் கோரிக்கைகள் இருந்தால், சட்டப்படி உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதைத் தெரிவிக்கலாம். தற்போதைய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com