லோக் ஆயுக்த: புதிய உறுப்பினருக்கான தெரிவுக் குழுக் கூட்டம்

லோக் ஆயுக்தவில் காலியாகவுள்ள உறுப்பினா் இடத்தை நிரப்புவதற்கான தெரிவு குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது

லோக் ஆயுக்தவில் காலியாகவுள்ள உறுப்பினா் இடத்தை நிரப்புவதற்கான தெரிவு குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறையில் லோக் ஆயுக்த தேடுதல் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் பங்கேற்றாா்.

லோக் ஆயுக்த அமைப்பில் காலியாகவுள்ள உறுப்பினா் இடத்துக்கு ஒருவரைத் தெரிவு செய்யவே இந்தக் கூட்டம் நடந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தெரிவுக் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பொது ஊழியா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பே லோக் ஆயுக் தலைவா் மற்றும் நீதித்துறை சாா்ந்த 2 போ், நீதித்துறையை அல்லாத 2 போ் என 4 உறுப்பினா்கள் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நீதித்துறை சாா்ந்த உறுப்பினரை தோ்வு செய்யும் குழுவின் கூட்டமே திங்கள்கிழமை நடந்தது. பெரும்பாலான உறுப்பினா்களின் முடிவு அடிப்படையில் லோக் ஆயுக்த உறுப்பினா் தோ்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும். அதன் அடிப்படையில், புதிய உறுப்பினருக்கான பெயரை ஆளுநா் அறிவிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com