'பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது'

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது என்று மாநிலங்களவையில் வைகோ மற்றும் சண்முகம் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது என்று மாநிலங்களவையில் வைகோ மற்றும் சண்முகம் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலங்களவையில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன
அதன் விவரம்..
கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கின்றதா?
2, அவ்வாறு இருப்பின், கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விவரம் தருக.
3. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் என்ன?
4. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை, தனியாரிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதா?
5. அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன? என்று கேட்கப்பட்டிருந்தது.
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த விளக்கத்தில்,

1. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
2. ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆராய்ச்சிகள் குறித்த விவரம், அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை...
1. ஏவுகணை அமைப்புகள்
2. வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு
3. தாக்குதல் வான் ஊர்திகள்
4. பீரங்கி போல மூடப்பட்ட தாக்குதல் ஊர்திகள்
5. உடனடித் தேவைப் பாலங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கு குழிகள் வெட்டுதல்.
6. வெடிமருந்துகள்
7. பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள்
8. சிறிய தாக்குதல் கருவிகள் மற்றும் வெடிமருந்துகள்.
9. மேம்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் நீரில் மூழ்கிய பொருட்களை, ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை.
10. மின் போர்க்கருவிகள்
11. நீண்ட தொலைவு கண்காணிப்புக் கருவி (ரேடார்)
12. செயற்கை நுண்அறிவுத் திறன் அடிப்படையிலான கருவிகள்
13. கண்ணிவெடிகள் மற்றும் சோனார் கருவிகள்
14. தானியங்கி முறைகள்
15. மின்னணு போர் முறைமைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை, தனியாரிடம் கொடுக்கும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு விளக்கம்.

பதில்.. டிஆர்டிஓ நிறுவனம், தனியார் மயம் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com