12 - 14 வயது சிறார்களுக்கு எந்த தடுப்பூசி செலுத்தப்படும்?

நாட்டில் உள்ள 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு நாளைமுதல் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
12 - 14 வயது சிறார்களுக்கு எந்த தடுப்பூசி செலுத்தப்படும்?

நாட்டில் உள்ள 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு நாளைமுதல் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 80 சதவீதம் பேருக்கு இரு தவணைகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலானவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாகவே ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி பரவலின் தாக்கமும் உயிரிழப்பும் குறைவாக இருந்ததாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா்.

தற்போது நாட்டில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

12 முதல் 14 வயது(2008, 2009, 2010-ஆம் ஆண்டுகளில் பிறந்தவா்கள்) வரையிலான சிறாா்களுக்கு ஹைதராபாதின் பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு தவணைகள் 28 நாள்கள் இடைவெளியில் செலுத்தப்படும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com