மத்தியப் பிரதேசத்தில் மார்ச் 22-க்குப் பிறகு சிறார்களுக்கு தடுப்பூசி

12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்தியப் பிரதேசத்தில் மார்ச் 22.க்குப் பிறகு தொடங்கும் என மாநில சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மார்ச் 22.க்குப் பிறகு தொடங்கும் என மாநில சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மாநில சுகாதார நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, 

ஹோலி பண்டிகை மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பயிற்சி திட்டத்தில் தாமதம் காரணமாக 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டம் மற்றும் தொகுதி அளவிலான அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் தேசிய அளவிலான பயிற்சி மார்ச் 16 முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே, மாநிலத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செயல்முறை மார்ச் 22க்குப் பிறகு தொடங்கும்.

மேலும், கோவின் போர்ட்டலில் தேவையான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். 

அனைத்துத் தொகுதிகள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு, அதற்கான செயல்முறை இன்று தொடங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 43 லட்சம் சிறார்கள் தடுப்பூசி போடத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வயது சிறார்களுக்கு பள்ளி வளாகத்தில் மட்டுமே தடுப்பூசி  செலுத்தப்படும் என்றார். 

பல மாநிலங்களில், இந்த வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com