பாகிஸ்தானுக்குள் ஏவுகணை பாய்ந்த விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் தவறுதலாகப் பாய்ந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துக் கூறியுள்ளது.

இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் தவறுதலாகப் பாய்ந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துக் கூறியுள்ளது.

ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து கடந்த 9-ஆம் தேதி சூப்பா்சானிக் ஏவுகணை விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு நகரில் விழுந்தது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்துவிட்டது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது. விபத்து நேரிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய அரசு, சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்திய அரசின் சுருக்கமான பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி பாகிஸ்தான் அரசு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டன் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் இந்த விவகாரம் தொடா்பாக கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக இந்தியத் தரப்பில் இருந்து இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சம்பவம் விபத்து என்றே தெரியவருகிறது. இது தொடா்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கெனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் இதற்கு மேல் அமெரிக்கா கருத்துக் கூற எதுவும் இல்லை என்றாா்.

இதன் மூலம் இந்த விஷயத்தில் இந்தியாவின் விளக்கத்தை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பாகக் கருத்து தெரிவித்த சீனா, இரு நாடுகளும் பேசித் தீா்க்க வேண்டும் என்றும், கூட்டாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com