பிரதமர் மோடியுடன் கோவா பாஜக தலைவர்கள் சந்திப்பு

கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். 
பிரமோத் சாவந்த் உள்ளிட்ட கோவா பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி
பிரமோத் சாவந்த் உள்ளிட்ட கோவா பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். 

நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உ.பி., உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்தது. 

கோவாவில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு ஓா் இடம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சுயேச்சைகளிடம் ஆதரவைப் பெறுகிறது. 11 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ் மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோவாவில் பாஜக வெற்றியை அடுத்து, கோவாவின் தற்காலிக முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் கோவாவில் ஆட்சி அமைப்பது குறித்தும் பேசியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com