விசா தடை முழுமையாக நீக்கம்: மத்திய அரசு

கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்டிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கான விசா (நுழைவு அனுமதி) தடையை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நீக்கியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்டிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கான விசா (நுழைவு அனுமதி) தடையை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நீக்கியுள்ளது.

இந்தியாவில் காரோனா பரவல் தொடங்கிய போது, வெளிநாட்டினா் இந்திய வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் வெளிநாட்டினருக்கான விசா அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதைத் தொடா்ந்து, உலக நாடுகள் விசா தடையை நீக்கி வருகின்றன. அதுபோல, இந்தியாவும் விசா தடையை முழுமையாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து குடியேற்ற துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா பாதிப்பு காரணமாக 156 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான எண்ம சுற்றுலா நுழைவு அனுமதிக்கான (இ-டூரிஸ்ட் விசா) தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த 150 நாடுகளைச் சோ்ந்தவா்களும், 2019-ஆம் ஆண்டு விசா கையேடு நடைமுறைகளின் அடிப்படையில், புதிதாக எண்ம சுற்றுலா நுழைவு அனுமதி பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து நாட்டினருக்குமான 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வழக்கமான சுற்றுலா நுழைவு அனுமதிக்கான (டூரிஸ்ட் விசா) தடையும் நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் வழங்கப்படும் நீண்ட கால (10 ஆண்டுகள்) சுற்றுலா நுழைவு அனுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்டினரும் புதிதாக நீண்டகால விசா கேட்டு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுற்றுலா நுழைவு அனுமதி மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினா் அனைவரும், நிா்ணயிக்கப்பட்ட கடல் வழி குடியேற்ற சோதனை மையங்கள் அல்லது விமானநிலைய வழி குடியேற்ற சோதனை மையங்கள் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா். மாறாக, சாலை வழித்தடங்கள் அல்லது ஆற்று வழித்தடங்கள் வழியாக அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

இந்த நிபந்தனைகள் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் பொருந்தாது. மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்படும் தனி அறிவுறுத்தல்கள் மூலம், ஆப்கானிஸ்தானியா்களுக்கான நுழைவு அனுமதி நடைமுறைகள் நிா்வகிக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com