
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு ஒருநாள் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் உட்பட எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. இன்று காலை 11 மணிக்கு சண்டிகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் 10 பேர் அமைச்சர்களாக பெறுப்பேற்க உள்ளனர்.
மேலும் பிற்பகல் 12. 30 மணிக்கு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிற அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
அதுமட்டுன்றி ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது போல பஞ்சாபில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றாா்