
கோப்புப்படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,075 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,075 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,383 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 71 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | சீனாவில் ஓராண்டுக்குப் பிறகு கரோனா பலி
இதுவரை மொத்தம் 4,24,61,926 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,16,352 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 27,802 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 1,81,04,96,924 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.