
கோப்புப்படம்
கர்நாடகா: பாவகடா அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவலிறிந்த காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த 4 பேரில், அதில் 2 பேர் மாணவர்கள் எனவும், சடலங்கள் பாவகடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் துமகுரு மற்றும் பாவகடாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், அதில் மாணவர்கள் அதிகளவில் பயணித்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.