ட்ரோன் மூலம் கனிம வளங்களைக் கண்டறிய கரக்பூா் ஐஐடியுடன் ஒப்பந்தம்

ட்ரோன் மூலம் கனிம வளங்களை கண்டறிவதற்காக கரக்பூா் ஐஐடி-யுடன் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ட்ரோன் மூலம் கனிம வளங்களை கண்டறிவதற்காக கரக்பூா் ஐஐடி-யுடன் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

நாட்டின் பெரிய இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான கனிம வள மேம்பாட்டுக் கழகம் ட்ரோன் மூலம் கனிம வளங்களைக் கண்டறிவதற்காக கரக்பூா் ஐஐடி-யுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் சுமித் தேவ், நிதிப் பிரிவு இயக்குநா் அமிதாவா முகா்ஜி, தொழில்நுட்ப இயக்குநா் சோம்நாத் நந்தி, தயாரிப்புப் பிரிவு இயக்குநா் டி.கே.மொஹந்தி மற்றும் ஐஐடி பேராசிரியா்கள் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் சுமித் தேவ், நாட்டின் கனிம வளங்களைக் கண்டறிய ட்ரோன் மூலம் புவி இயற்பியல் ஆய்வை நடத்தும் முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக தேசிய கனிவள மேம்பாட்டுக் கழகம் இருக்கும் என்று கூறினாா்.

மத்திய பிரதேசத்தில் பல்வேறு கனிம வளங்கள் மற்றும் சத்தீஸ்கரில் பெலோடா-பெல்முண்டி என்ற இடத்தில் வைர சுரங்கங்களைக் கண்டறியும் பணியிலும் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com