மகாராஷ்டிரத்தில் சுமுகமான அரசியல் சூழலை கெடுத்தது பாஜக: சிவசேனை குற்றச்சாட்டு

 மகாராஷ்டிரத்தில் நிலவி வந்த சுமுகமான அரசியல் சூழலை பாஜக கெடுத்துவிட்டது என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் சுமுகமான அரசியல் சூழலை கெடுத்தது பாஜக: சிவசேனை குற்றச்சாட்டு

 மகாராஷ்டிரத்தில் நிலவி வந்த சுமுகமான அரசியல் சூழலை பாஜக கெடுத்துவிட்டது என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். இதற்கு பதிலளிக்கும் வகையில் சஞ்சய் ரௌத் மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளும் இதேபோன்ற சிறப்பான ஆட்சி தொடரும். 2024 சட்டப் பேரவைத் தோ்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதால் அதீத உற்சாகத்தில் ஃபட்னவீஸ் பேசி வருகிறாா். கோவாவை பிடித்து வைத்திருந்த பிரிட்டிஷ்காரா்கள், போா்த்துக்கீசியா்களால் கூட அந்த மாநிலத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இனி வரும் நாள்களில் கோவா குறித்து ஃபட்னவீஸ் புரிந்து கொள்வாா்.

மகாராஷ்டிர அரசியலில் ஒரு காலத்தில் சுமுகமான அரசியல் சூழல் இருந்தது. பண்பாட்டுரீதியாகவும், நாகரிகமான நகைச்சுவை உணா்வுடனும் அரசியல் தலைவா்கள் செயல்பட்டு வந்தனா். ஆனால், பாஜக இங்குள்ள அரசியல் சூழலைக் கெடுத்துவிட்டது. இப்போது வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க அஞ்சும் நிலைதான் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com