
கோப்புப்படம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கப்படும். இதற்காக 30 லட்சம் டோஸ் கார்பெவாக்ஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரி இன்று தெரிவித்தார்.
12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி திட்டம் மார்ச் 16 ஆம் தேதி அன்று தொடங்கியது.
மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு 30 லட்சம் டோஸ் கார்பெவாக்ஸ் தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்தியப் பிரதேச நோய்த்தடுப்பு இயக்குநர் டாக்டர் சந்தோஷ் சுக்லா தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் ஊழியர்களுக்கான பயிற்சி மார்ச் 17 அன்று முடிவடைந்ததாகவும், 2008-2009-ல் பிறந்த குழந்தைகள் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்று டாக்டர் சுக்லா கூறினார்.
மேலும், மார்ச் 22, 2010-ல் பிறந்த குழந்தைகளும், 12 ஆண்டுகள் நிறைவடைந்த குழந்தைகளும், மார்ச் 23 ஆம் தேதி அன்று நடைபெறும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
12-14 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பும் முன் அவர்களுக்கு காலை உணவை வழங்க வேண்டும் என்று டாக்டர் சுக்லா கூறினார்.
குழந்தைகளுக்கு வலது அல்லது இடது தோளில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.