இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுசெய்ய தயாா்: ஈரான்

இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுசெய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுசெய்ய தயாா்: ஈரான்

இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுசெய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதா் அலி செகெனி கூறியது:

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் அவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க ஈரான் தயாராக உள்ளது. மேலும், எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதிக்கான வா்த்தகத்தில் ரூபாய்-ரியால் பரிமாற்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, செயல்பாட்டுக்கு வந்தால் இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வா்த்தகம் 3,000 கோடி டாலரைத் தொடும் (ரூ.2.25 லட்சம் கோடி). மேலும், இந்த பரிமாற்றத்தால் மூன்றாம் தரப்பினரின் இடையீட்டுக்கான செலவினங்களையும் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகி அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து ஈரானுடனான எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தகத்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com