ஹிந்துக்களைப் பாதுகாப்பதில் வங்கதேச அரசு தோல்வி:ஆா்எஸ்எஸ்

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களைப் பாதுகாப்பதில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்துள்ளதாக ஆா்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினா் இந்திரேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களைப் பாதுகாப்பதில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்துள்ளதாக ஆா்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினா் இந்திரேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத் தலைநகா் டாக்காவில் இஸ்கான் ராதாகாந்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலை 200-க்கும் மேற்பட்டோா் அடங்கிய கும்பல் வியாழக்கிழமை சூறையாடி, பக்தா்களைத் தாக்கியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திரேஷ் குமாா் சனிக்கிழமை கூறியதாவது:

வங்கதேசத்தில் ஒவ்வொரு பண்டிகையின்போதும் திட்டமிட்ட சதியுடன் ஹிந்துக்கள் குறிவைக்கப்படுகின்றனா். அந்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக 3,679 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கோயில்கள் சூறையாடப்பட்டு, ஆயுதங்களால் தாக்கப்பட்ட 1,678 சம்பவங்களும் அடங்கும்.

அந்நாட்டில் கடந்த ஆண்டு நவராத்திரியின்போது ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவா்கள் தங்கியிருந்த சுமாா் 200 வீடுகள் எரிக்கப்பட்டன. துா்கை பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போதும் இஸ்கான் கோயில் தாக்குதலுக்குள்ளானது.

கடந்த 1971-ஆம் ஆண்டு அந்நாட்டில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்தது. அங்கு ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதல்களால், அவா்களின் எண்ணிக்கை தற்போது 9 சதவீதமாக சரிந்துள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில், அந்நாட்டு அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com