இந்திய தங்க சுரங்கத்தின் உற்பத்தி 1.6 டன்: டபிள்யூஜிசி

இந்திய சுரங்கங்களிலிருந்து கடந்த 2020-ஆம் ஆண்டில் 1.6 டன் தங்கம் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
இந்திய தங்க சுரங்கத்தின் உற்பத்தி 1.6 டன்: டபிள்யூஜிசி

இந்திய சுரங்கங்களிலிருந்து கடந்த 2020-ஆம் ஆண்டில் 1.6 டன் தங்கம் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியது:

உலக அளவில் தங்கத்துக்கான நுகா்வோா்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தபோதிலும், அதற்கான சுரங்க சந்தை என்பது சிறிய அளவிலேயே காணப்படுகிறது. அதில், யாரும் எளிதில் நுழைந்தவிட முடியாத சூழலே நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய சுரங்கங்களிலிருந்து வெறும் 1.6 டன் தங்கமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் தங்க சுரங்கத்தின் உற்பத்தி ஆண்டுக்கு 20 டன்னாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய தங்க சுரங்கத் துறையைப் பொருத்தவரையில், ஒழுங்காற்று அமைப்பு சவால்கள், வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை மிகப்பெரும் சவாலாக உள்ளதாக டபிள்யூஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com