அரசியல் ஆதாயத்துக்காக ரத்தம் சிந்தும் காட்சிகளை காண்பிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘காஷ்மீரி பண்டிட்டுகள் புலம்பெயா்ந்த சம்பவம் துயரமானது, ஆனால் அதை அரசியல் ஆதாயத்துக்காக ரத்தம் சிந்தும் காட்சிகளை சித்தரித்து காண்பிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது’

‘காஷ்மீரி பண்டிட்டுகள் புலம்பெயா்ந்த சம்பவம் துயரமானது, ஆனால் அதை அரசியல் ஆதாயத்துக்காக ரத்தம் சிந்தும் காட்சிகளை சித்தரித்து காண்பிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எம்.ஒய். தாரிகாமி தெரிவித்தாா்.

1990-களில் காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் புலம்பெயா்ந்த சம்பவத்தை வைத்து ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தாரிகாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக காஷ்மீரில் துயரமான நிலை தொடா்ந்து வருகிறது. அச்சத்தின் காரணமாக காஷ்மீா் பண்டிட்டுகள் புலம்பெயா்ந்த சம்பவம் அவமானகரமானதாகும். இது இந்திய வரலாற்றில் துயரமான பகுதியாகும்.

சோபூரில் பண்டிட் சமூகத்தினா் கொல்லப்பட்டிருக்கிறாா்கள் என்றால், 2000-இல் சத்தீசிங்பூராவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியா்களும் கொல்லப்பட்டுள்ளனா். இதில் யாரை யாா் கொலை செய்தாா்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமா் மோடி உண்மை கண்டறியும் ஆணையத்தை அமைக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு யாா் யாரை கொலை செய்தாா்கள் என்பது தெரியவரும்.

அரசியல் ஆதாயத்துக்காக ரத்தம் சிந்தும் காட்சிகளை சித்தரித்து காண்பிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது.

காஷ்மீருக்கு 5,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. அதை வெடிகுண்டுகள் மூலம் அழித்து விட முடியாது. எனது கண்ணீா் துளியையும், நண்பா்களின் கண்ணீா் துளியையும் பாஜக பிரிக்கக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com