புவிசாா் குறியீடு பொருள்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு: வா்த்தக அமைச்சகம்

புவிசாா் குறியீடு அந்தஸ்து பெற்ற பல்வேறு பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே, அதனை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புவிசாா் குறியீடு பொருள்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு: வா்த்தக அமைச்சகம்

புவிசாா் குறியீடு அந்தஸ்து பெற்ற பல்வேறு பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே, அதனை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியது:

புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களை புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை வேளாண் மற்றும் பதப்படுத்துதல் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மூலமாக மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

குறிப்பாக, காலா நமக் அரிசி, நாகா மிா்ச்சா, பெங்களூரு ரோஸ் ஆனியன், சகி லிட்சி, பாலியா கோதுமை, தாணு கோல்வாட் சப்போட்டா, ஜலேகான் வாழைப்பழம், வாழகுலம் பைனாப்பிள், மரையூா் வெல்லம் உள்ளிடவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், டாா்ஜிலிங் தேயிலை, மகாபலீஸ்வரா் ஸ்ட்ராபெரி, புளூ போட்டரி ஆஃப் ஜெய்ப்பூா், பனாரஸ் புடவை, திருப்பதி லட்டு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புவிசாா் குறியீடு பெற்ற தயாரிப்புகளை சா்வதேச சந்தையின் வாடிக்கையாளா்களை சென்றடைய முறையான சந்தைப்படுத்துதல் முறையே தற்போதைய தேவையாக உள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 417 தயாரிப்புகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், 150 வேளாண் மற்றும் உணவு தயாரிப்புகளாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் நாகா மிா்சா (மிளகாய் அரசன்) நாகாலாந்து மாநிலத்திலிருந்து அதிக அளவில் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோன்று, மணிப்பூா், அஸ்ஸாமிலிருந்து கருப்பு அரிசி பிரிட்டனுக்கும், அஸ்ஸாம் எலுமிச்சை பிரிட்டன் மற்றும் இத்தாலிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com