Enable Javscript for better performance
பஞ்சாபில் இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    பஞ்சாபில் இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

    By DIN  |   Published On : 19th March 2022 11:49 AM  |   Last Updated : 19th March 2022 11:49 AM  |  அ+அ அ-  |  

    Punjab

    இரண்டு மருத்துவர்கள் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

    பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் புதிதாக அமைந்துள்ள ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். மொத்தமாக 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், தலைமை செயலகத்தில் அவர்கள் பொறுப்பேற்று கொள்ளவுள்ளனர். பின்னர், 12:30 மணி அளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சட்டப்பேரவை உறுப்பினர்களான ஹர்பால் சிங் சீமா, மருத்துவர் பல்ஜித் கவுர், ஹர்பஜன் சிங், மருத்துவர் மவிஜய் சிங்லா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 

    குர்மிர் சிங் மீட் ஹையர், ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கத்ருச்சக், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், பிரம் ஷங்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்

    பஞ்சாபில் முதல்வர் உள்பட மொத்தம் 18 அமைச்சர்கள் இருக்கலாம். முன்னதாக, கடந்த மார்ச் 16ஆம் தேதி, சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். அடுத்த நாள், சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். 

    இதையும் படிக்கபஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு: இரண்டு துணை முதல்வர்கள்?

    இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாப் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டேன். எங்களைத் தேர்ந்தெடுத்த பஞ்சாப் மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும். பஞ்சாபின் நேர்மையான அரசாக நமது அரசு அறியப்படும்" என பதிவிட்டுள்ளார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp