
நாட்டில் 95% கிராமங்களில் 5 கி.மீ.க்குள் பள்ளிகள்: மக்களவையில் தகவல்
புது தில்லி: நாட்டில் உள்ள 95 சதவீத கிராமங்களில், வெறும் 5 கி.மீ. தொலைவுக்குள் பள்ளிகள் இருப்பதாக மக்களவையில் இன்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னப்பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல, 90 சதவீத கிராமங்களில் வெறும் 7 கி.மீ. தொலைவுக்குள் உயர்நிலைப் பள்ளிகள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும், தரமான கல்வி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்வதாகவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.