
கோப்புப்படம்
கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எனினும், முதல்வர் யார் என்பது குறித்த முடிவு மட்டும் எடுக்கப்படாமலே இருந்தது.
இதையும் படிக்க | மூன்றரை மணிநேரம் விசாரணை: நாளையும் ஆஜராகிறார் ஓபிஎஸ்
இந்த நிலையில், கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், பாஜக மேலிடப் பார்வையாளருமான நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
"பாஜக சட்டப்பேரவைத் தலைவராக பிரமோத் சாவந்த் பெயரை விஷ்வஜித் ராணே முன்மொழிந்தார். அனைவரும் பிரமோத் சாவந்தை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரே சட்டப்பேரவைத் தலைவராக இருப்பார்."