தில்லியில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 97 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 97 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.41 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் சனிக்கிழமை மொத்தம் 23,766 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 26,147-ஆக உயா்ந்துள்ளது.

தேசியத் தலைநகரில் சனிக்கிழமை 61 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஒரு இறப்பும், 0.68 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 140 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், நோ்மறை விகிதம் 0.43 சதவீதமாகவும் பதிவாகின.

நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 365-ஆகக் குறைந்துள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 3,147-ஆக சரிந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 10,244 கரோனா படுக்கைகளில் தற்போது 73 (0.71) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com