
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், இந்திய பயணிகள் சா்வதேச பயணங்களை மேற்கொள்ள வசதியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் தற்போது முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட தினத்திலிருந்து 9 மாதங்களுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மாா்ச் 16-ஆம் தேதிமுதல் 12 வயதுடைய சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.