கனவுக்காக தினமும் இரவில் 10 கிமீ தூரம் ஓடும் இளைஞர்: ஒரு நெகிழ்ச்சிக் கதை!

உ.பி.யைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தினமும் தன் பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு தினமும் 10 கி.மீ தூரம் ஓடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனவுக்காக தினமும் இரவில் 10 கிமீ தூரம் ஓடும் இளைஞர்: ஒரு நெகிழ்ச்சிக் கதை!

உ.பி.யில் 19 வயது இளைஞர், தன் பணியிடத்திலிருந்து வீட்டுக்கு தினமும் இரவில் 10 கி.மீ தூரம் ஓடும் விடியோ இணையத்தில் வைரலாகி மக்களின் மனங்களை வென்றுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் வசித்துவருகிறார் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது இளைஞர். குடும்ப வறுமை காரணமாக நொய்டா செக்டார் 16ல் உள்ள மெக் டொனல்டு கடையில் வேலை செய்து வருகிறார். 

இவர் தினமும் இரவு வேலை முடிந்ததும், தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு 10 கிமீ தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இதைக் கவனித்து வந்த ஒருவர், இளைஞர் ஓடுவதை விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ராணுவத்தில் சேர்வதே தன்னுடைய இலக்கு என்றும் பயிற்சி எடுக்க நேரமில்லாததால் தினமும் இரவில் 10 கிமீ ஓடுவதாகவும் பிரதீப் கூறிய பிறகு, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டினைப் பெற்று வருகிறார். மேலும் அவருக்கு உதவிகளும் குவிந்து வருகின்றன. 

சமூக ஊடகங்களில் விடீயோ வைரலான பிறகு பல செய்தி நிறுவனங்களும் அவரை பேட்டி எடுத்து வருகின்றன. 

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அவர் அளித்த பேட்டியில், 

சமூக ஊடகங்களில் விடியோவைப் பகிர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றி. அவரால் இன்று நான் மக்களின் அன்பைப் பெற்றுள்ளேன். எனக்கு இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இதன் மூலமாக பலரும் ஊக்கமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் எனது இதயப்பூர்வமான நன்றி. 

நான் வேலைக்குச் செல்வதால் பயிற்சி எடுக்க நேரமில்லாததால் இரவில் வீட்டுக்குச் செல்லும் நேரம் ஓடுகிறேன். ராணுவத்தில் சேர்வதே எனது இலக்கு. ராணுவத்தில் சேர விரும்பும் மற்றவர்களுக்கும் இது ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.

என் தாயார் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நானும் என் சகோதரனும் மட்டுமே வேலை செய்கிறோம்.

விடியோவைப் பார்த்து பலரும் எனக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்களுக்கும் என் நன்றி' என்று கூறியுள்ளார். 

திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் கப்ரி ட்விட்டரில் இளைஞர் ஓடும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு பல நிறுவனங்கள், பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர். 

தன்னைத் தொடர்பு கொண்டு பலரும் இளைஞருக்கு உதவி வருவதாக வினோத் கப்ரியும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com