ராமர் கோயில் கட்ட ரூ.2.5 கோடி நன்கொடை கொடுத்த இஸ்லாமிய குடும்பம்

பிகாரில் இஸ்லாமிய குடும்பத்தினர் ராமர் கோயில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.
ராமர் கோயில் கட்ட ரூ.2.5 கோடி நன்கொடை கொடுத்த இஸ்லாமிய குடும்பம்

பிகாரில் இஸ்லாமிய குடும்பத்தினர் ராமர் கோயில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.

பிகார் தலைநகர் பாட்னைச் சேர்ந்த கேசரியா பகுதியில் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தளமாக ‘விராட் ராமாயண் மந்திர்’ ஹிந்து கோயில் விரைவில் கட்டப்பட உள்ளதால் அதற்கான நன்கொடைகளைப் பலரும் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், பாட்னாவைச் சேர்ந்த இஸ்லாமியக் குடும்பம் தங்களுக்குச் சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை ‘விராட் ராமாயண் மந்திர்’கட்ட நன்கொடையாக அளித்துள்ளனர்.

இதுகுறித்து அக்குடும்பத்தினர் சார்பில் பேசிய, இஸ்தியாக் அகமது கான் என்பவர் ‘கோயில் அமைய இருக்கும் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்கள் என் குடும்பத்திற்குச் சொந்தமானது. கோயிலைக் கட்டுவதற்கு இந்த இடத்தை நன்கொடையாகக் கொடுப்பது எங்களின் கடமையாகவே கருதுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரூ.500 கோடி செலவில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கும் ‘விராட் ராமாயண் மந்திர்’ கோயில் 18 ஹிந்து கடவுள்களைக் கொண்டு உருவாக இருந்தாலும் ராமர் மற்றும் சீதாவை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே இந்தக் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com