முடிவுக்கு வருகிறது கரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு

நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31-க்குள் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வருகிறது கரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு
முடிவுக்கு வருகிறது கரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு


புது தில்லி: நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31-க்குள் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியிருக்கும் கடிதத்தில்இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளையும் இனியும் தொடர வேண்டிய அவசியமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக, மத்திய உள்விவகாரத் துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது என்று மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே வேளையில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சமூக பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த கரோனா கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com