கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம்: ஹரியாணா பேரவையில் நிறைவேற்றம்

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் ஹரியாணா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் ஹரியாணா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கடந்த 4-ஆம் தேதி பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பேசிய பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான மனோகா் லால் கட்டாா், ‘தாமாக முன்வந்து மதமாற்றிக் கொண்டால் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், கட்டாயப்படுத்தியும், அச்சுறுத்தியும் மதமாற்றம் செய்யக் கூடாது.

கட்டாயப்படுத்தி மதமாற்றி குற்றம் செய்பவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் இதன்மூலம் தடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 6 மாவட்டங்களில் 127 கட்டாய மதமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா பேசுகையில், ‘கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே சட்டம் உள்ளபோது, இந்தப் புதிய சட்டம் தேவையில்லை’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் கிரண் செளதரி பேசுகையில், ‘இந்த மசோதா பிரிவினையை உண்டாக்கும். வருங்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதை பேரவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ என்றாா். காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com