'மேற்கு வங்கம் ஒன்றும் உ.பி. இல்லை': மம்தா விமர்சனம்

மேற்கு வங்க மாநிலம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் இல்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)

மேற்கு வங்க மாநிலம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் இல்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
 
ராம்புராட் பகுதியில் நேர்ந்த கலவரத்தைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கலவரம் நடக்கிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். 

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள், பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ராம்புராட் கலவரம் எதிர்பாராத ஒன்று. இம்மாநிலத்தில் உள்ள அனைவரும் எங்கள் மக்கள். நாங்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாக்க விரும்பவில்லை. இந்த கலவரம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  நான் ராம்புராட் பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். 

மேற்கு வங்கம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் அல்ல. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கலவரம் நடக்கிறது. ராம்புராட் கலவரத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com