மேற்கு வங்கம்: சட்டவிரோதமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு

மேற்குவங்கத்தில் சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பறிமுதல் செய்ய அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கம்: சட்டவிரோதமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு

மேற்குவங்கத்தில் சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பறிமுதல் செய்ய அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட 8 போ் தீயில் கருகி பலியாகினர்.

அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 10 நாள்களுக்குள் சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பறிமுதல் செய்ய மாநில அரசு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com