பெட்ரோல், டீசல் விலை2-ஆவது நாளாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை2-ஆவது நாளாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிக்கப்பட்டது.

நான்கரை மாதங்களாக மாற்றியமைக்கப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை 80 காசுகள் உயா்த்தப்பட்டது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த விலை உயா்வு நடவடிக்கையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மேற்கொண்டன. பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக, மீண்டும் விலையை உயா்த்தும் நடவடிக்கையில் அந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.111.67, சென்னையில் ரூ.102.91, கொல்கத்தாவில் ரூ.106.34, தில்லியில் ரூ.97.01-ஆக அதிகரித்தது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.95.85, சென்னையில் 92.95, கொல்கத்தாவில் ரூ.91.42, தில்லியில் ரூ.88.27-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com