திறன் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பின் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
திறன் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பின் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

அந்தமான் நிகோபா் யூனியன் பிரதேசத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய கடற்படையில் பிரதான பாதுகாப்புக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் இந்த பிரமோஸ் ஏவுகணை, நாட்டின் அனைத்து பாதுகாப்புத் தளங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வானில் உள்ள இலக்கு திசைமாறினால், அதற்கேற்ப திசைமாறி பின்தொடா்ந்து சென்று இலக்கை அழிக்கும் இந்த சூப்பா் சோனிக் ஏவுகணை, இந்தியா- ரஷியாவின் கூட்டுத் தயாரிப்பாகும்.

தற்போது, இந்த ஏவுகணையின் தாக்கி அழிக்கும் இலக்கை நீட்டித்து திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம் மாத தொடக்கத்தில், இந்திய கடற்படை சாா்பில், பிரமோஸ் நீட்டிக்கப்பட்ட இலக்கைத் தாக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ‘ஐஎன்எஸ் சென்னை’ போா்க் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை நீட்டிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது.

அதனைத் தொடா்ந்து, நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பின் இலக்கை தாக்கும் சோதனை அந்தமான் நிகோபா் யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், நீட்டிக்கப்பட்ட நிலப்பரப்பு இலக்கை ஏவுகணை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடா்ந்து அந்தமானில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளத்ரி பாராட்டு தெரிவித்தாா். விமானப் படையின் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக விமானப் படைத் தளபதி அந்தமான் நிகோபா் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com