ஒரே நாளில் 1.7 லட்சம் மருத்துவ ஆலோசனை: இசஞ்சீவனி புதிய சாதனை

ஒரே நாளில் 1.7 லட்சம் ஆலோசனைகளை வழங்கி இசஞ்சீவனி புதிய சாதனையை படைத்துள்ளது.
ஒரே நாளில் 1.7 லட்சம் மருத்துவ ஆலோசனை: இசஞ்சீவனி புதிய சாதனை
ஒரே நாளில் 1.7 லட்சம் மருத்துவ ஆலோசனை: இசஞ்சீவனி புதிய சாதனை

புது தில்லி: ஒரே நாளில் 1.7 லட்சம் ஆலோசனைகளை வழங்கி இசஞ்சீவனி புதிய சாதனையை படைத்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் முதன்மை தொலைமருத்துவ சேவையான “இசஞ்சீவனி” மூலம் 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. முதல் 5 இடங்களில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.

தனது இணைய வழிச் சுகாதாரப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இசஞ்சீவனி தொலைமருத்துவ சேவை 3 கோடி மருத்துவ ஆலோசனைகளைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 1.7 லட்சம் ஆலோசனைகளை வழங்கி இசஞ்சீவனி புதிய சாதனையையும் படைத்துள்ளது.

சில மாநிலங்களில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்தச் சேவை செயல்படுகிறது. மேலும் சில மாநிலங்களில் 24 மணி நேரமும் இயங்குகிறது. கொவிட்-19-ன் போது தொலைமருத்துவ சேவை கணிசமாக பங்களித்ததோடு மருத்துவமனைகளின் சுமையையும் குறைத்தது.

3 கோடி பயனாளிகளில், 2,26,72,187 பேர் இசஞ்சீவனி யுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தளம் மூலமாகவும், 73,77,779 பேர் இசஞ்சீவனி வெளி நோயாளிகள் பிரிவு மூலமாகவும் பலன்களைப் பெற்றுள்ளனர். தேசிய தொலைமருத்துவ சேவையில் பயனாளிகளுக்கு சேவை செய்ய 1,00,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இசஞ்சீவனி மருத்துவ ஆலோசனைகளைப் பயன்படுத்தியதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com