தில்லி மக்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் இ-சுகாதார அட்டை வழங்கப்படும்: கேஜரிவால் 

தில்லியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அடுத்தாண்டுக்குள் இ-சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று அந்நாட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
தில்லி மக்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் இ-சுகாதார அட்டை வழங்கப்படும்: கேஜரிவால் 

தில்லியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அடுத்தாண்டுக்குள் இ-சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று அந்நாட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

சுகாதாரத் தகவல் மேலாண்மை அமைப்பு மற்றும் இ-சுகாதார அட்டை திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு கேஜரிவால் தலைமை தாங்கினார். 

அப்போது அவர் பேசியது, 

சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக இ-சுகாதார அடையாள அட்டையை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இ-சுகாதார அடையாள அட்டை அடுத்தாண்டுக்குள் மக்களுக்கு வழங்கப்படும். இந்த சுகாதார அட்டை மூலம் ஒவ்வொரு முறை, மருத்துவரையோ, அல்லது மருந்தகங்களையோ நீங்கள் அணுகும்போது, பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், இந்த சுகாதார அட்டையில் பதிவேற்றமாகிவிடும் வகையில் க்யூஆர்(QR) அடிப்படையில் அட்டை இருக்கும். 

2023-ம் ஆண்டு சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பு அமல்படுத்துவதுடன், தில்லி வாசிகள் அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் முதல்வருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com