ரூ. 75,800 கோடி மதிப்பிலான தில்லி பட்ஜெட் தாக்கல்

தில்லி சட்டப்பேரவையில் ரூ. 75,800 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.
ரூ. 75,800 கோடி மதிப்பிலான தில்லி பட்ஜெட் தாக்கல்


தில்லி சட்டப்பேரவையில் ரூ. 75,800 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையின்போது மணீஷ் சிசோடியா கூறியதாவது:

"தில்லியில் கடந்த 7 ஆண்டுகளில் 1.78 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 51,307 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தில்லியிலுள்ள தனியார் துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கரோனா தாக்கத்திலிருந்து தில்லியின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. 2011-12இல் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தியில் தில்லியின் பங்கு 3.94 சதவிகிதமாக இருந்தது. 2021-22இல் இது 4.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2021-22 நிதியாண்டு பட்ஜெட்டின் அளவு ரூ. 69,000 கோடி. 2022-23 பட்ஜெட்டுக்கு ரூ. 75,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 6,154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி தனிநபர் வருமானத்தின் சராசரி நாட்டின் சராசரியைவிட 2.7 சதவிகிதம் அதிகமாக உள்ளது. தில்லியில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 33 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

தில்லியில் பிரபலமான 5 சந்தைகள் மேம்படுத்தப்பட்டு 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்கென ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது."

ஆம் ஆத்மி தாக்கல் செய்யும் தொடர்ச்சியாக 8-வது பட்ஜெட் இது. கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த பட்ஜெட்டில் 9.86 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com