மே. வங்க பேரவையில் பாஜக - திரிணமூல் இடையே மோதல்: 5 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக, திரிணமூல் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே. வங்க பேரவையில் பாஜக - திரிணமூல் இடையே மோதல்
மே. வங்க பேரவையில் பாஜக - திரிணமூல் இடையே மோதல்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக, திரிணமூல் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை (மார்ச் 21) இரவு கொலை செய்யப்பட்டாா்.  இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள், பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பீர்பூம் விவகாரம் மற்றும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க பாஜக வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், திரிணமூல் கட்சியினரும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இரண்டு கட்சி உறுப்பினர்களும் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், பாஜகவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்பட 5 பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுவேந்து அதிகாரி கூறியதாவது, “இந்த விவகாரத்தில் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும்.

சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தோம், ஆனால் மறுக்கப்பட்டது. எங்கள் எம்எல்ஏக்கள் 8 முதல் 10 பேருடன் மோதுவதற்காக கொல்கத்தா காவல்துறையினரை சிவில் உடையில் பேரவைக்குள் அழைத்து வந்தனர்” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com