இந்தியாவில் மேலும் 1,270 பேருக்கு கரோனா: சிகிச்சை பெறுவோர் 15,859 

இந்தியாவில் இன்று மேலும் 1,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் மேலும் 1,270 பேருக்கு கரோனா: சிகிச்சை பெறுவோர் 15,859 

இந்தியாவில் இன்று மேலும் 1,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,270 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 15,859 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 31 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். 

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,035 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,567 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,24,83,829 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 4,20,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நாட்டில் இதுவரை 183 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
நேற்று ஒரேநாளில் 4,32,389 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 78.73 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com