வீடு தேடி ரேசன் திட்டம் அமலுக்கு வந்ததும், பிற மாநிலத்தவரும் கோருவார்கள்: கேஜரிவால்

பஞ்சாப் அரசு வீடு தேடி ரேசன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதும், பிற மாநிலத்தவரும் கோரிக்கத் தொடங்குவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார். 
வீடு தேடி ரேசன் திட்டம் அமலுக்கு வந்ததும், பிற மாநிலத்தவரும் கோருவார்கள்: கேஜரிவால்

பஞ்சாப் அரசு வீடு தேடி ரேசன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதும், பிற மாநிலத்தவரும் கேட்கத் தொடங்குவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுவதாவது, 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். மக்களின் வீட்டு வாசலில் ரேசன் வழங்கப்படும் திட்டம் ஏழைகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்தை தில்லியில் செயல்படுத்த முயற்சித்து வருகிறோம். ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு தில்லியில் இந்த திட்டைத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், ஏழைகள் இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நல்ல தரமான ரேசன் அவர்களின் வீட்டு வாசலில் வழங்கப்படும். இந்த திட்டம் தகுதியானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com